திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக சீரமைப்புக் குழுவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான தலைமைக் கழகப் பிரதிநிதியாக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியும், கன்னியாகுமரி மாவட்டத்திற்குத் தலைமைக் கழகப் பிரதிநிதியாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தனக்கு இந்த முக்கியப் பொறுப்பை வழங்கியதற்காகத் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி கருணாநிதி மற்றும் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் ஆகியோருக்கு ஜி.வி. மார்கண்டேயன் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மேயர் ஜெகன் பெரியசாமி நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீரமைப்புக் குழுவில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கான தலைமைக் கழகப் பிரதிநிதியாகத் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்திற்குத் தலைமைக் கழகப் பிரதிநிதியாகத் தன்னை நியமித்து முக்கியப் பொறுப்பை வழங்கிய கழகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் கழக அமைப்பினை மேலும் வலுப்படுத்தி, சீரமைப்புப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.