இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான மரங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை பணிகள் குறித்தும், மேலும் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வளர்ப்பு மற்றும் வனப்பகுதிகளை மேம்படுத்துவது குறித்தும், பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்கள் வெட்டுவதை ஒழுங்குப்படுத்துவது மற்றும் புதிய மரக்கன்றுகள் நடுவதை கண்காணிப்பது குறித்தும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2026–27ஆம் ஆண்டில் மரக்கன்றுகள் நடுவதற்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை எய்திடுவது குறித்தும்,
வேளாண் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்களில் மரக்கன்றுகளும் நடவு செய்ய திட்டமிடுதல் குறித்தும். பனை வளத்தை மேம்படுத்தும் வகையில் வனத்துறை மூலம் பனை விதைகள் நடவு செய்ய மேற்கொண்டுள்ள திட்டமிடுதல் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர், நா.சரவணன், உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) சாந்தி, சந்திரசேகர், பசுமை தோழர் சங்கீதா மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

