தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் கோமு (38). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று அவர் டாஸ்மாக் அருகில் உள்ள வாய்காலில் நீரில் மிதந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தவலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது நெற்றியில் இரத்த காயம், இரு கால் முட்டில் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.