தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகேயுள்ள கன்னிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரதுரை மகன் தங்கதுரை (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் அவரது தாயாரிடம் தகராறு செய்து செய்து வந்தாராம். ஏற்கனவே 2 முறை தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அவர் வழக்கம் போல அவரது அம்மாவிடம் தகராறு செய்து விட்டு, கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தங்கதுரை அம்மாவின் சேலையை பயன்படுத்தி சீலிங் ஃபேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து நாசரேத் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

