தூத்துக்குடி மாநகராட்சி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் நகர்ப்புற வட்டார வள மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பள்ளியின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 'விழுதுகள் ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்' அமைக்கும் பணிகள் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான சுத்திகரிப்பு மையம் அமைப்பதற்கான இடத்தையும் நேரில் ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூத்துக்குடி மடத்தூர் அருகேயுள்ள துரைகனி நகரிலிருந்து பக்கீல் ஓடை செல்லும் கால்வாய்கள், 3-வது மைல் பாலத்திலிருந்து திரேஸ்புரம் வரை செல்லும் பக்கீல் ஓடை கால்வாயை அகலப்படுத்துதல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அபிராமி நகர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோயல் குமார், வருவாய் கோட்டாட்சியர் மி. பிரபு மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

