அதானி சிமெண்ட் நிறுவனம் ‘ஜஹான் விஸ்வாஸ், வாஹன் சக்தி’ என்கிற பெயரில் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் உள்ள கைமோர் சிமெண்ட் உற்பத்தி ஆலையில் 15,000 சிமெண்ட் மூட்டைகளைக் கொண்டு துர்கா தேவியின் உருவம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
70 அடி உயரம், 70 அடி அகலம் (4,900 சதுர அடி பரப்பளவு) மற்றும் 750 டன் எடை கொண்ட 15,000 அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி சிமெண்ட் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டு இந்தக் கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தரையில் இருந்து பார்க்கும்போது மிகத் துல்லியமாக அடுக்கிய தனித்தனி அலகுகளாகக் காட்சியளிக்கும் சிமெண்ட் மூட்டைகள், 'ஏரியல் வியூ' எனப்படும் வானில் இருந்தோ அல்லது உயரமான இடத்திலிருந்தோ பார்க்கும்போது துர்கா தேவியின் பிரம்மாண்டமான வடிவமாகக் காட்சியளிக்கின்றன.
இந்தத் கலைப்படைப்பு உருவான பயணத்தையும், அதன் பிரமிப்பான வான்வழி காட்சியையும் பின்னணி இசை, உணர்வுபூர்வமான காட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றுடன் ஒரு குறும்படம் போலத் தயாரித்து அதானி சிமெண்ட் நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது.

