தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் சைவ வேளாளர் சங்கத்தின் சார்பாக ஐம்பெரும் விழா சைவ வேளாளர் சங்கத் தலைவர் பாரதி சங்கர் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் பொன் பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார், கோமதி சங்கரலிங்கம், மேனன் முன்னிலை வகித்தனர், சுப்பையா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பெருங்குளம் செங்கோல் ஆதீனம் ஆசியுரை வழங்கினார்.
மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் பாலன், நிர்வாகத் துணைத் தலைவர் இசக்கிமுத்து, வ உ சி பேரவை செயலாளர் குமரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த ஐம்பெரும் விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குப்புசாமி, காயல் உமாபதி, சண்முகவேல், முத்துசாமி, பாலமுருகன், பாலதண்டபாணி, சண்முகநாதன், முருகன், சுப்ரமணியன்,ஜெகதீஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். சங்கத்தின் பொருளாளர் செல்வ கிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். நிர்வாகிகள் உறுப்பினர்கள் உளடபம பலர் கலந்து கொண்டனர்.

