தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் வாசன் ஐ கேர் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வாசன் ஐ கேர் தலைமை மருத்துவர் டாக்டர் எஸ். கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், கண் நோய்கள் மற்றும் அவற்றின் அறிகுறிகள், கண் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் அவசியம், பார்வைக் குறைபாடுகளைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.
தொடர்ந்து, வாசன் ஐ கேர் மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்ற சுமார் 200 மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிப் பணியாளர்களுக்கு இலவசமாகக் கண் பரிசோதனை மேற்கொண்டு, உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
கல்லூரி முதல்வர் எஸ்.ஏ. சண்முகம் வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் த. நடராஜன் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

