தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஷீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் முழு உருவச் சிலைக்குப் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பக்தர்கள் குத்துவிளக்கேற்றி, பூ, பழங்கள் உள்ளிட்ட பொருட்களைப் படைத்து, பாபாவின் பஜனைப் பாடல்களைப் பாடி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டுசிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இச்சிறப்பு வழிபாட்டில் விளாத்திகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.