» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
நாடாளுமன்ற வளாகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம்
வெள்ளி 15, டிசம்பர் 2023 12:23:54 PM (IST)

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வண்ண புகை குப்பிகளை வீசிய விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று காலை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் எம்.பி கே.சுரேஷ் கூறுகையில், "எங்கள் கோரிக்கை உண்மையானது. இந்தத் தாக்குதலானது மக்களவை அறைக்குள் நடந்ததுள்ளது. இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது. பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சரோ நாடாளுமன்றத்துக்கு வந்து விளக்கமளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "கேள்வி கேட்பது எங்களுடைய கடமை. எங்கள்மீது குற்றம் சாட்டி, நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று கூறினால், அந்த பிரச்சினையை அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது என்று அர்த்தம். இது குறித்து பிரதமர் ஏதாவது தெரிவித்திருக்கிறாரா?” என்று வினவினார். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிக்கள், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வரும்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அவர்களைச் சந்தித்துப் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் : அமித்ஷா பேட்டி!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:49:25 PM (IST)

தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சனி 29, மார்ச் 2025 4:07:11 PM (IST)

அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 26, மார்ச் 2025 5:06:29 PM (IST)

தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை: ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
திங்கள் 24, மார்ச் 2025 12:41:28 PM (IST)

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை
திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

INDIANDec 22, 2023 - 03:37:25 PM | Posted IP 172.7*****