» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை

திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தை நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும், தி.மு.க. அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள், நபர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

அந்த சோதனையின் முடிவாக, அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க.வின் ஆட்சி அதிகார வரலாறு.

அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மக்கள் ஒதுக்குவார்கள்

இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல.ஆனால், எத்தனை கோடிகளை கொட்டினாலும், இனி தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

SOORIYANMar 26, 2025 - 02:41:14 PM | Posted IP 172.7*****

இந்த டுபாக்கூர் நடிகனையும் மக்கள் விரட்டி அடிப்பார்கள்

Mar 19, 2025 - 07:00:50 PM | Posted IP 172.7*****

அரசியல்வாதிகள் , பணக்கார புள்ளைகள் எல்லாம் மிஷனரி நாட்டுக்கு படிக்குதாமே ஏன் ??

ஓ அப்படியாMar 19, 2025 - 06:59:26 PM | Posted IP 162.1*****

இங்குள்ள இந்துக்கள், விஜய் முல்லையா, ஜட்டி வாசுதேவ், யோகா கோமாளி பாபா ராம்தேவ், போன்ற பணம் கொழுத்த அரசியல்வாதிகள் எல்லாம் மிஷனரி நாட்டுக்கு போய் செட்டில் ஆகுதாம் ஏன்? அந்த ஊரு பிடிக்குதாமே

ஒல்லா லூயா அவர்களேMar 19, 2025 - 06:56:02 PM | Posted IP 172.7*****

முட்டா சங்கிகள் இங்குள்ள மிஷனரிகளை கண்டால் கோபம் வரும் , வெளிநாட்டு மிஷனரிகளை கண்டால் இனிக்குதாம். போயா அங்குட்டு.

HALLULUYAMar 19, 2025 - 03:46:36 PM | Posted IP 162.1*****

மோடி எல்லா நாட்டிற்கும் செல்கிறார்,அரபு நாட்டிற்கும் செல்கிறார், இந்த மிஷனரிகள் டிரம்ப் பேரை சொல்லி கொண்டு அவரது காலை நக்கிக்கொண்டு, மோடி ஐ பற்றி குறை கூறுகிறார்கள்.

VIJAIIIIII அவர்களுக்குMar 19, 2025 - 10:52:52 AM | Posted IP 104.2*****

அது இருக்கட்டும்.அடிக்கடி மிஷனரி கிறிஸ்தவ நாட்டுக்கு செல்லும் மோடிக்கு என்ன வேலை?? மிஷனரி டிரம்ப் கால்ல நக்கவா ?

VIJAIIIIIIMar 17, 2025 - 01:14:06 PM | Posted IP 162.1*****

அது தெரிந்த விஷயம். ஆனால் மிஷனரியான உங்களால் கண்டிப்பாக வர முடியாது....காணாமல் போய்விடுவார்....

ஆனந்த்Mar 17, 2025 - 09:13:43 AM | Posted IP 162.1*****

நீ ஆண்டி ஆவது நிச்சயம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory