» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில், தூத்துக்குடி தாமோதரநகர் DMNS. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 108 மாணவர்களும் முழுமையாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் ச.சந்தோஷ் குமார் 493/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவர்கள் R.தீபக் கண்ணன், S.பிரணீஷ் ஆகியோர் 492 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாதி B.சிவ ரஞ்சனி 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
பாட வாரியாக அறிவியல் பாடத்தில் 8 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 2 மாணவிகளும் 100/100 மதிப்பெண்கள் குவித்து சாதனை படைத்துள்ளனர்.பள்ளி அளவில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 37 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் தெக்ஷிணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், பள்ளி தாளாளர் எஸ்.ஆர்.எஸ். உமரிசங்கர் நாடார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் நேரில் பாராட்டி, முதலிடம் பிடித்த மாணவருக்கு ரொக்கப்பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

காமநாயக்கன்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
வெள்ளி 1, மே 2026 8:21:17 PM (IST)

எட்டையபுரம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:14:04 AM (IST)

