» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில், நூலகத் துறையின் வாசகர் மன்றம் சார்பில் தேசிய வாசிப்பு வார விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கேரள மாநிலத்தின் கல்வியாளர் மற்றும் நூலக இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பி. என். பணிக்கர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை தேசிய வாசிப்பு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி நூலகத் துறையின் வாசகர் மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் ஆர். செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர் இராஜு சிறப்புரையாற்றி, வாசிப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, வணிகவியல் துறை மாணவி ஆனந்தி வாசிப்பு உறுதிமொழி ஏற்கச் செய்தார். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் புத்தக விமர்சனங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக வணிகவியல் துறை மாணவி காயத்ரி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக நூலகத் துறைத் தலைவர் செண்பகாதேவி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூலகத் துறைத் தலைவர் பா. செண்பகாதேவி, வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களான ஆங்கிலத் துறை பேராசிரியர் திவ்யா
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

