» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
வியாழன் 25, ஜூன் 2026 3:56:20 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருட்களின் தீமைகளை விளக்கும் விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகளவில் ஆண்டுதோறும் ஜூன் 26-ஆம் தேதி சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் பென்னிசன் தலைமை தாங்கி, போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்துப் பேசி அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் மோசஸ் விழிப்புணர்வு வாழ்த்துரை வழங்கினார். நிகழ்வில், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ராஜசிங் ரோக்லண்ட் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான முக்கிய உறுதிமொழியை வாசித்தார்.
அதனை ஏற்று மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் அனைவரும் போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம் என உறுதியேற்றுக் கொண்டனர். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஒட்டுமொத்த ஏற்பாடுகளையும் கல்லூரிச் செயலர் ராஜன், முதல்வர் பென்னிசன், ஆங்கிலத் துறை பேராசிரியரும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஷெர்லின் ராஜா, பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!
புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)

தருவைக்குளம் அரசுப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மாணவர்களுக்கு அறிவுரை!
செவ்வாய் 30, ஜூன் 2026 11:44:24 AM (IST)

கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம் கல்லூரியில் தேசிய வாசிப்பு வார விழா நிகழ்ச்சி!
வியாழன் 25, ஜூன் 2026 8:35:01 AM (IST)

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

