» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மர்காஷிஸ் கல்லூரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்பு!

புதன் 1, ஜூலை 2026 7:59:13 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் பங்கேற்றார். 

நாசரேத் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு மன்றம் சார்பில் "இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பென்னிசன் தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். உடற்கல்வி இயக்குநர் ராஜசிங் ரோக்லண்ட் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் முரளி ஆகியோர், போதைப்பொருள் பழக்கத்தால் உடல்நலம், மனநலம், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர். மேலும், போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள், குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் இளைஞர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி செயலர் எஸ்.டி.கே. ராஜன், முதல்வர் டாக்டர் பென்னிசன் திலகர் கிறிஸ்துதாஸ், ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத் துறை பேராசிரியருமான ஷெர்லின் ராஜா, பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory