» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பகுதிகளில் சுதந்திர தின விழா
சனி 16, ஆகஸ்ட் 2025 10:35:42 AM (IST)

நாசரேத் பகுதிகளில் 79வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை வகித்தார்.பள்ளி தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் செந்தில் குமார் தேசிய கொடியேற்றினார். மாணவிகள் மெலோசா, ஜெனிபர் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி வைஷ்ணவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் மாரிதங்கம் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சியில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். துணை தலைவர் அருண் சாமுவேல், செயல் அலுவலர் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், துப்புரவு ஆய்வாளர் முத்துவேல், சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் சுதந்திர தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து தேசிய கொடியேற்றினார். இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

