» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சக்தி வித்யாலயா பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:11:03 PM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மூன்றாவது சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 79-வது சுதந்திர தினவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆசிரியை கௌரி வரவேற்று பேசினார். விழாவில் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் ஆ.ஜெயாசண்முகம் தலைமையில் நாகர்கோவில் லையன்ஸ் கிளப் அமைப்பின் செயலாளர் லயன் பாலசங்கரி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதன் பின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேடப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை ஜெபமாலை நன்றியுரையாற்றினார். ஆசிரியை கிருபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிறைவாக மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு தேசியகீதத்துடன் விழா நிறைவுற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

