» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 4:37:46 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாசரேத் மர்காசிஸ் நகரில் இயங்கி வரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கோயில் ராஜ் ஞானதாசன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி போதை ஒழிப்பு திட்ட அலுவலர் பிரபாகர் வேதசிரோண்மணி, வேலைவாய்ப்பு அலுவலர் ஜான் வெஸ்லி, பர்சர் தனபால் ஆகியோர் போதை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோசம் தலைமையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் பள்ளிகளின் தாளாளர் ரமா மற்றும் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், ஜான் வெலிங்டன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

