» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம்
புதன் 30, ஜூலை 2025 11:39:59 AM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடந்தது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் ரமா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் வரவேற்றார்.
சிவில் துறை தலைவர் ரஞ்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஊழியர்கள் முகாமை நடத்தினர். மொத்தம் 262 பேர்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி பர்சார் தனபால் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம் தலைமையில் முதல்வர் கோயில்ராஜ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் லிவிங்ஸ்டன் நவராஜ், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

