» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

தூத்துக்குடியில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மேலூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சாரோன் தொண்டு நிறுவனம் சார்பில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. மேலும் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களான பிரகதீஷ், பவானி, அபிஷேக், தாரிகா ஆகியோருக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களான வெ உலகம்மாள், முத்துக்குமாரி ஆகியோருக்கும் வட்டார கல்வி அலுவலர் வெ சரஸ்வதி அம்மா கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.
விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி செய்திருந்தார். மேலும் உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி மைக்கேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதி நிகழ்வாக எம் பள்ளியில் மாற்றுப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் கோ கலைவாணி பட்டதாரி ஆசிரியர் தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி பரிசுப் பொருள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

தூத்துக்குடி, சிதம்ப நகர், கல்விக்கழக நடுநிலைப்பள்ளி மாணவன் மணிமாறன் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான். அவருக்கு பள்ளி செயலர் சேதுராமலிங்கம், தலைமை ஆசிரியர் சுப்ரமணியன், வகுப்பு ஆசிரியை செல்லம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)


RajaApr 17, 2025 - 12:31:07 PM | Posted IP 162.1*****