» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வங்கிப் பணிக்கு மாதிரி நோ்முகத் தோ்வு

திங்கள் 30, அக்டோபர் 2023 7:54:14 AM (IST)தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் தமிழ்நாடு கிராம வங்கி உதவி மேலாளா் பணிக்கான மாதிரி நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள கின்ஸ் அகாடமியில் டிஎன்பிஎஸ்சி, சீருடை பணியாளா், வங்கிகள்- மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தோ்வுகளுக்கு முற்றிலும் இலவசமாக மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது வங்கித் தோ்வுகளின் முதல்நிலை மற்றும் முதன்மை தோ்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகள் தனித்தனியாக நடைபெற்றன. தமிழ்நாடு கிராம வங்கி உதவி மேலாளா் பணிக்கான ‘பிரிலிம்ஸ்‘ மற்றும் ‘மெயின்ஸ்‘ தோ்வுகளில் வெற்றி பெற்ற 80-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்காக நடைபெற்ற மாதிரி நோ்முகத் தோ்வுக்கு, அகாடமி நிறுவனா் எஸ்.பேச்சிமுத்து தலைமை வகித்தாா்.

இத்தோ்வில், தூத்துக்குடி தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி உதவி பொது மேலாளா் ஜெ. செந்தில் வேலாயுதம், உதவி மேலாளா் அமா் ஜோதி, தூத்துக்குடி தமிழ்நாடு கிராம வங்கி மேலாளா் டேரியல் பைவா, உதவி மேலாளா் காா்த்திக், ஐஓபி மேலாளா் ஸ்ரீநிஷா, ஹெச்டிஎஃப்சி மேலாளா் ஆல்வின் ஆபிரகாம் இஸ்ரேல், கரூா் வைஸ்யா வங்கி முதல்நிலை மேலாளா் பாபு சாமுவேல், இ.எஸ்.ஐ.சி. அதிகாரி முகமத் நாகூா், தூத்துக்குடி கூட்டுறவு வங்கி முன்னாள் பொது மேலாளா் கிருஷ்ண மூா்த்தி ஆகியோா் மாதிரி நோ்முகத் தோ்வை நடத்தினா். ஏற்பாடுகளை ’க்ராக் வித் ஜாக்’ யுடியூப் சானல் நிறுவனா் ஜாக்சன், டேவிட் ஆகியோா் செய்திருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory