» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)

கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும்: அரசு செயலர் அறிவுரை

சனி 15, பிப்ரவரி 2025 5:53:57 PM (IST)



கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும் என்று புதுச்சேரி அரசு செயலர் சுந்தரேசன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். 

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில் "நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடார் உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.  சென்னைவாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் தங்கமுத்து, விளாத்திகுளம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் முத்துகாமாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி செயலாளர் கண்ணன் நோக்க உரையாற்றினார். 

புதுச்சேரி அரசு செயலர் சுந்தரேசன் ஐ.ஏ.எஸ். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிறைமதி பல்சுவை மலரை வெளியிட்டும், சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருதினை பேராசிரியர் ரவி முருகனுக்கு வழங்கியும் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் கருத்தரங்கினை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது: மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவதற்கு முதன்மை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வு போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் கடின உழைப்புடன் பயிற்சி செய்து படித்தால் உயர் பதவி கிடைக்கும்.

மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கு பெற்றோர்களின் உந்துதல் தேவை, எனவே மாணவர்கள் பெற்றோர்களின் உதவியுடன் போட்டி தேர்வுகளில் கடின உழைப்பையும் பயிற்சியும் செலுத்தினால் உயர் பதவிக்கு வரலாம் இவ்வாறு பேசினார். இதில் விருதாளர் பேராசிரியர் ரவி முருகன் ஏற்புரை வழங்கினார்.இதில் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் சரவணகுமார், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் செல்வராஜ் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory