» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வியாழன் 7, நவம்பர் 2024 8:54:38 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. 9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவர்-மாணவிகளுக்கு இவ்வுதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 என 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.
இதுவரை அரசின் பிற உதவித்தொகை பெறாதவராகவோ, எந்த நிறுவனத்திலும் பணி புரியாதவராகவோ இருப்பது அவசியம். இந்த உதவித்தொகை பெறுவதற்கு, அனைத்துக் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை செப்.30 வரை நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:45:55 PM (IST)

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 25, மே 2024 11:45:50 AM (IST)

டி.என்.பி.எஸ்.சி., நேர்முக தேர்வில் மாற்றம்
திங்கள் 4, டிசம்பர் 2023 5:13:36 PM (IST)

தூத்துக்குடியில் 17ஆம் தேதி கல்விக்கடன் சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
சனி 4, நவம்பர் 2023 4:24:07 PM (IST)

தூத்துக்குடி கின்ஸ் அகாடமியில் வங்கிப் பணிக்கு மாதிரி நோ்முகத் தோ்வு
திங்கள் 30, அக்டோபர் 2023 7:54:14 AM (IST)
