» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செப்.16ல் தொழில் துவங்க முகாம் பயிற்சி!
திங்கள் 11, செப்டம்பர் 2023 4:20:37 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 16ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்க ஒரு நாள் பயிற்சி முகாம் துடிசியா அரங்கத்தில் வைத்து நடக்கிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் சங்கத்தின் (துடிசியா) பொதுசெயலாளர் து.ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்த பல திட்டங்களை அறிவித்துள்ளார். மானியங்களுடன் கூடிய கடன் உதவி, ஈடு உத்திரவாத நிதியம் மற்றும் முயற்சி மூலதன நிதியம் போன்ற திட்டங்கள் அரசின் கொள்கையளவில் வடிவுபெற்றுள்ளன.
இதன் ஒரு பகுதியாக சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிய சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்; சங்கம் (துடிசியா) இணைந்து 16.09.2023 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை துடிசியா அரங்கத்தில் வைத்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.
சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சிக்கு கட்டணம் கிடையாது. தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் முதற்கட்டமாக சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவுசெய்வது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோர்க்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சிமுகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
அடுத்த கட்டமாக திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். தகுதி உள்ளவர்கள் அரசு வழங்கும் மானிய திட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன்மூலம் நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். திட்டங்கள் மூலம் நிதி உதவி பெறும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியாளர்’ திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம்.
இப்பயிற்சிகளில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் மாவட்ட தொழில் மையங்களும் இணைந்து செயல்படும். எனவே, அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். முன்பதிவு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு 9791423277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம்? ம.சு. பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள் - முழு பட்டியல்
திங்கள் 24, பிப்ரவரி 2025 4:35:36 PM (IST)

கடின உழைப்பும் பயிற்சியும் இருந்தால் உயர் பதவி கிடைக்கும்: அரசு செயலர் அறிவுரை
சனி 15, பிப்ரவரி 2025 5:53:57 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வியாழன் 7, நவம்பர் 2024 8:54:38 AM (IST)

நன்னீர் அலங்கார மீன்வளர்ப்பு குறித்த பயிற்சி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு
புதன் 9, அக்டோபர் 2024 5:18:05 PM (IST)

அரசு ஐடிஐகளில் நேரடி சேர்க்கை செப்.30 வரை நீட்டிப்பு : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
வெள்ளி 6, செப்டம்பர் 2024 7:45:55 PM (IST)

குரூப் 2, 2ஏ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சனி 25, மே 2024 11:45:50 AM (IST)
