» கல்வி / வேலை » வழிகாட்டி (தூத்துக்குடி)
அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 20, ஜூலை 2023 4:20:05 PM (IST)
திருச்செந்தூரில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு மாணவர்களின் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
கல்வித்தகுதி 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது மற்றும் பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், விலையில்லா சீருடை விலையில்லா காலணி மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 கூடுதல் உதவித்தொகை ஆகியவை இலவசமாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இது போல் 8-ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருச்செந்தூர், முதல்வரை நேரில் அணுகவும். 04639-242253, 9123504636, 9842757985, 9488201582, 9499055813 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.