» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

8-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை: ஜூன் 16வரை விண்ணப்பிக்கலாம்!

புதன் 7, ஜூன் 2023 4:51:28 PM (IST)

சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (என்சிசி) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள்: 

பணி: அலுவலக உதவியாளர்(Office Assistant)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயது வரம்பு: 18 முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் (Driver)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

வயது வரம்பு:18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் இலகுரக, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

http://cms.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  The Commanding Officer, TNBTY NCC NO-28, Dr.Alagappa Road, Sethu House Annexe, Purasaiwakkam, Chennai-600 084. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 16.6.2023 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory