» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
புதன் 18, செப்டம்பர் 2024 4:29:48 PM (IST)
ஐபிஎல் தொடரில் ரிக்கி பாண்டிங் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும் உலகக் கோப்பையை வென்ற கேப்டனுமான ரிக்கி பாண்டிங் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தில்லி அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். தற்போது பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார்.
இது குறித்து பஞ்சாப் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்பிரிங் பேட், உலகக் கோப்பை, பாண்டிங்கின் பேட்டினை பதிவிட்டுள்ளார்கள். ரிக்கி பாண்டிங் பேட்டிங் விளையாடும்போது அவரது பேட்டில் ஸ்பிரிங் இருப்பதாக 1990களில் இந்தியாவில் வதந்திகள் கிளம்பின. அதனை நினைவுப்படுத்தும் விதமாக பஞ்சாப் அணி பதிவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 8 சீசன்களில் பஞ்சாப் அணிக்கு இது 6ஆவது பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.