» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி புதிய தலைவராக ஜெய் ஷா பொறுப்பேற்பு
திங்கள் 2, டிசம்பர் 2024 5:40:47 PM (IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலராக ஜெய் ஷா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் ஐசிசியின் தலைவர் பொறுப்பிலிருந்த கிரெக் பார்கிளே மூன்றாவது முறையாக, ஐசிசியின் தலைவர் பொறுப்பைத் தொடர்வதற்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.
இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய் ஷா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள 5-வது இந்தியர் என்ற பெருமையை ஜெய் ஷா பெற்றார்.