» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தொடர் தோல்வியில் இருந்து சிஎஸ்கே மீண்டு வரும்: ஷேன் வாட்சன் நம்பிக்கை

புதன் 9, ஏப்ரல் 2025 5:38:29 PM (IST)



சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரும் என்று முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறினார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சிஎஸ்கேவின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள்.

பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை. நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம்.

ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.

சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளெமிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது. என்று வாட்சன் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education






Thoothukudi Business Directory