» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கே.எல்.ராகுல் அதிரடி ஆட்டம் : பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 11:54:05 AM (IST)

ஐபிஎல் சீசன் 18 டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தி டெல்லி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பெற்றது.
பெங்களூருவில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் கோஹ்லி, சால்ட் நல்ல தொடக்கத்தை தந்தனர். சிக்சர், பவுண்டரிகளை விளாசித் தள்ளிய சால்ட் 37 ரன்னில் (17 பந்து, 3 சிக்ஸ், 4 பவுண்டரி) துரதிஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த படிக்கல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்பின், டெல்லி அணியில் குல்தீப் யாதவ், நிகம் அட்டகாசமாக பந்துவீசி ஆர்சிபியின் ரன் வேகத்தை மொத்தமாக கட்டுப்படுத்தினர். படிதார் (25 ரன்), ஜிதேஷ் சர்மா (3) விக்கெட்டை குல்தீப் வீழ்த்த, கோஹ்லி (22 ரன்), குருணல் பாண்டியா (18) விக்கெட் நிகம் கைப்பற்றினார்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் 4 சிக்சருடன் 20 பந்தில் 37 ரன் விளாச ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது. குல்தீப் (4 ஓவர், 17 ரன்), நிகம் (4 ஓவர், 18 ரன்) தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 93 ரன் எடுத்தார். இதன் மூலம் டெல்லி அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பெற்றது.
சிறப்பாக பேட் செய்த ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். "இது என்னுடைய சொந்த ஊர். என்னுடைய ஹோம் கிரவுண்ட். என்னை விட இந்த மைதானம் குறித்து யாரும் அவ்வளவு நன்றாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இங்கு விளையாடுவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது” என அவர் கூறினார். ஆர்சிபி உடனான வெற்றியை மிகவும் ஆக்ரோஷத்துடன் ராகுல் கொண்டாடினார். வழக்கமாக களத்தில் இது மாதிரியான உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்த மாட்டார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடுவோம்: சிஎஸ்கே கேப்டன் தோனி நம்பிக்கை
திங்கள் 21, ஏப்ரல் 2025 10:23:45 AM (IST)

ஆவேஷ் கான் அசத்தல் பந்துவீச்சு: 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி!
ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:03:01 PM (IST)

பெங்களூ ஆணியை வீழ்த்தியது பஞ்சாப்: அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை!
சனி 19, ஏப்ரல் 2025 10:59:07 AM (IST)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த அதிரடி வீரர்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:08:34 PM (IST)

ஐபிஎல்லில் மேட்ச் பிக்சிங்..? வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:35:40 PM (IST)

கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் த்ரில் வெற்றி!
புதன் 16, ஏப்ரல் 2025 12:36:11 PM (IST)
