» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆவேஷ் கான் அசத்தல் பந்துவீச்சு: 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி!

ஞாயிறு 20, ஏப்ரல் 2025 12:03:01 PM (IST)



ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 2 ரன்  வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 36-வது ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் அரை சதம் கடந்து 66 ரன்னில் அவுட்டானார். 

ஆயுஷ் பதோனி அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய அப்துல் சமத் 10 பந்தில் 4 சிக்சர் உள்பட 30 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பொறுப்புடன் ஆடி அரை சதம் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 14 வயதில் அறிமுகமான சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அசத்தினார். அவர் 20 பந்தில் 34 ரன்கள் எடுத்து அவுட்டானார். நிதிஷ் ரானா 8 ரன்னில் வெளியேறினார்.

3வது விக்கெட்டுக்கு இணைந்த ஜெய்ஸ்வால்- ரியான் பராக் ஜோடி 62 ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 39 ரன்னில் அவுட்டானார். இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தானுக்கு கிடைத்த 6வது தோல்வி ஆகும். லக்னோ சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory