» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பார்டர்- கவாஸ்கர் டிராபி: பெர்த் டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றி!

திங்கள் 25, நவம்பர் 2024 5:27:30 PM (IST)



பெர்த் டெஸ்டில் இந்திய அணி, 295 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்- கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இந்தியா 150, ஆஸ்திரேலியா 104 ரன் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 487 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. 534 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 12 ரன் எடுத்து தவித்தது.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. கவாஜா (4), சிராஜ் 'வேகத்தில்' வெளியேறினார். மீண்டும் மிரட்டிய இவர், ஸ்டீவ் ஸ்மித்தை 17 ரன்னில் அவுட்டாக்கினார். பின் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் இணைந்தனர். இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். ஹெட் அரைசதம் கடந்தார்.

ஆறாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது, பும்ரா பந்தில் ஹெட் (89) கிளம்பினார். மிட்சல் மார்ஷ் (47), நிதிஷ் குமார் பந்தில் அவுட்டானார். ஸ்டார்க் (12), லியானை (0), வாஷிங்டன் சுந்தர் திருப்பி அனுப்பினார். கடைசியில் ஹர்ஷித் ராணா பந்தில் அலெக்ஸ் கேரி (36) அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 238 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணி 295 ரன் வித்தியாசத்தில் இமாயல வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தியா சார்பில் பும்ரா 3, சிராஜ் 3, வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் சாய்த்தனர். கேப்டன் பும்ரா (5+3= 8 விக்.,) ஆட்டநாயகன் ஆனார். இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 6-10ல் அடிலெய்டில் நடக்க உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory