» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மார்க்ராம் அரைசதம்: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்!

சனி 6, ஏப்ரல் 2024 11:24:08 AM (IST)சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்கடித்தது.

ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அஜிங்க்யா ரஹானே 35, ஷிவம் துபே 24 ரன்கள் எடுத்தனர்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 165 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் தரப்பில் புவனேஸ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ், ஷபாஸ் அகமது மற்றும் ஜெயதேவ் உனத்கட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக மார்க்ராம் 50, அபிஷேக் சர்மா 37 ரன்கள் குவித்தனர். சென்னை அணியின் மொயின் அலி 2, தீக்‌ஷனா மற்றும் தீபக் சஹார் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

Thoothukudi Business Directory