» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சூப்பர் மேன் உடையணிந்து வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்...!!

புதன் 3, ஏப்ரல் 2024 3:47:33 PM (IST)மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் லோகோவுடன் கூடிய வேடிக்கையான சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்தனர்.

ஐ.பி.எல்.-ல் 5 பட்டங்கள் வென்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை சறுக்கலுடன் தொடங்கி உள்ளது. இதனையடுத்து மும்பை அணி தனது 4-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

இந்நிலையில் மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் லோகோவுடன் கூடிய வேடிக்கையான சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கான காரணம் என்னவெனில், அணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் நிர்வாகம் இவர்களுக்கு இந்த விநோதமான தண்டனையை வழங்கியுள்ளது. ஆலோசனை கூட்டங்களுக்கு தாமதமாக வரும் வீரர்கள், அவர்கள் அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது சூப்பர் மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை அணி நிர்வாகம் விநோதமான தண்டனையை அறிமுகப்படுத்தி உள்ளது.

தொடர் தோல்விகளால் நெருக்கடியான சூழலில் இருக்கும் மும்பை அணி, இதுபோன்ற ஜாலியான தண்டனைகளால் அணிக்குள் உற்சாகம் ஏற்படும் என கருதுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory