» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆர்.சி.பி அணியால் சாம்பியன் ஆக முடியாது: மைக்கேல் வாகன் கருத்து
சனி 30, மார்ச் 2024 11:01:25 AM (IST)

இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு ஆர்.சி.பி அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கொல்கத்தா வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். அதிலும் கொல்கத்தாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பில் சால்ட் மற்றும் நரைன் முதல் 6 ஓவர்களில் 85 ரன்கள் குவித்து அசத்தினர். இதையடுத்து களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் ஆர்.சி.பி அணி இந்த பந்துவீச்சு கூட்டணியை வைத்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் "பெங்களூரு அணியால் இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு சாம்பியன் பட்டத்தை வெல்ல சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிவேக 6அயிரம் ரன்கள்: விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:33:02 PM (IST)

ஆர்சிபி அணியின் கேப்டனான ரஜத் பட்டிதார் நியமனம்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:42:47 PM (IST)

கில் புதிய சாதனை: ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றது இந்திய அணி!
வியாழன் 13, பிப்ரவரி 2025 8:49:32 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : பும்ரா விலகல்!
புதன் 12, பிப்ரவரி 2025 11:50:25 AM (IST)

சாம்பியன்ஸ் டிராபியை தென்னாப்பிரிக்கா வெல்லும்: முன்னாள் கேப்டன் நம்பிக்கை
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:26:06 PM (IST)

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் : ரோகித் சர்மா புதிய சாதனை!
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:28:52 PM (IST)
