» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

2023 ஐசிசி டெஸ்ட் அணியில் அஸ்வின், ஜடேஜா!

செவ்வாய் 23, ஜனவரி 2024 4:46:06 PM (IST)



2023-ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இந்திய அணி சார்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 

2023-ம் ஆண்டிற்கான ஆண்கள் டெஸ்ட் கிரிகெக்ட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்து 2023-ம் ஆண்டிற்கான டெஸ்ட் கிரிக்கெட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் 5 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியில் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இரு இந்திய வீரர்களுக்கு இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணி விவரம்; உஸ்மான் கவாஜா (ஆஸ்திரேலியா), திமுத் கருணாரத்னே (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர், ஆஸ்திரேலியா), பேட் கம்மின்ஸ் (கேப்டன், ஆஸ்திரேலியா), ரவிச்சந்திர அஸ்வின் (இந்தியா), மிட்செல் ஸ்டார் (ஆஸ்திரேலியா), ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து).


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory