» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ருதுராஜ், தேஷ்பாண்டே அபாரம்: ஐதராபாத் அணியை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

திங்கள் 29, ஏப்ரல் 2024 10:52:31 AM (IST)ருதுராஜ்(98 ரன்), துஷார் தேஷ்பாண்டே(4 விக்.,) அசத்த, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் 'பீல்டிங்' தேர்வு செய்தார். சென்னை அணிக்கு ரகானே (9) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல் ஜோடி கைகொடுத்தது. ஷாபாஸ் அகமது, புவனேஷ்வர் ஓவரில் தலா 2 பவுண்டரி விரட்டிய ருதுராஜ், கம்மின்ஸ் பந்தை சிக்சருக்கு அனுப்பி 27 பந்தில் அரைசதம் கடந்தார். 

பொறுப்பாக ஆடிய மிட்செல் 29 பந்தில் அரைசதம் எட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்த போது உனத்கட் பந்தில் மிட்செல் (52) அவுட்டானார். நடராஜன் ஓவரில் 2 சிக்சர் விளாசிய ஷிவம் துபே, கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன் சேர்த்த போது நடராஜன் 'வேகத்தில்' ருதுராஜ் (98) வெளியேறினார். சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. துபே (39), தோனி (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவாலான இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு துஷார் தேஷ்பாண்டே தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ஹெட் (13), அன்மோல்பிரீத் சிங் (0), அபிஷேக் சர்மா (15) வெளியேறினர். மார்க்ரம் (32) ஆறுதல் தந்தார். நிதிஷ் குமார் ரெட்டி (15), கிளாசன் (20), அப்துல் சமத் (19) சோபிக்கவில்லை. ஷாபாஸ் அகமது (7), கேப்டன் கம்மின்ஸ் (5), உனத்கட் (1) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 134 ரன்னுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. புவனேஷ்வர் (4) அவுட்டாகாமல் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory