» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

துபே- ஜெய்ஸ்வால் அதிரடி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

திங்கள் 15, ஜனவரி 2024 1:39:58 PM (IST)



துபே- ஜெய்ஸ்வால் அதிரடியாக அரைசதம் அடிக்க ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. 

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி குல்படின் நைப்-ன் அதிரடி அரை சதத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக ரோகித் - ஜெய்வால் களமிறங்கினர். ரோகித் தனது 150 டி-20 போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவர் முதல் போட்டியிலும் 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - விராட் கோலி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். விராட் கோலி 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து களமிறங்கிய துபே ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். அதிரடியாக விளையாடி 2 பேரும் அரை சதம் அடித்தனர். ஜெய்ஸ்வால் 68 ரன்னிலும் ஜித்தேஷ் சர்மா 0 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 15.4 ஓவரில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. துபே 63 ரன்னிலும் ரிங்கு சிங் 9 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory