» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் துருவ் ஜூரல் தேர்வு; ஷமி, கிஷன் நீக்கம்!

சனி 13, ஜனவரி 2024 3:20:32 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் உத்தரபிரதேச விக்கெட் கீப்பர்-பேட்டர் துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜனவரி 25 முதல் தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா துணைக் கேப்டனாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் வேகப்  பந்துவீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. ரஞ்சி போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணாவும் அணியில் இடம்பெறவில்லை. 

அதேபோல் ஷர்துல் தாக்குரும் அணியில் இடம்பெறவில்லை. யாரும் எதிர்பாராத விதமாக அக்‌ஷர் படேல் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்திய அணியில் புதுமுகமாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜுரல்  இடம்பெற்றுள்ளார். 

இந்திய அணி விவரம் (முதல் இரண்டு போட்டிகளுக்கு): ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணைக் கேப்டன்), மற்றும் ஆவேஷ் கான்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory