» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஸ்டம்பிங் ரிவ்யூ விதிமுறைகளில் மாற்றம் : ஐசிசி அறிவிப்பு!

வெள்ளி 5, ஜனவரி 2024 10:40:59 AM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் ரிவ்யூ விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பிங் ஆவதை மூன்றாவது நடுவர் ரிவ்யூ செய்யும்போது, பந்து பேட்டில் உரசி கேட்ச் ஆனதா? என்பது சோதிக்கப்பட்டு அதன்பின்னர் ஸ்டம்பிங் சோதனை செய்யப்படும் . இது பந்துவீசும் அணிக்கு சாதகமாக இருந்து வந்தது.

இந்நிலையில் ஐசிசி அந்த விதிமுறையில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி விக்கெட் கீப்பர் ஸ்டம்பிங் ரிவ்யூ செய்யும்போது, லெக் சைட் நடுவர் ஸ்டம்பிங் தீர்ப்புக்காக 3ஆவது நடுவரிடம் சென்றால், லெக் அல்லது ஆப் திசையில் உள்ள கேமராக்களின் மூலமாக மட்டுமே ஸ்டம்பிங் சோதனை செய்யப்படும் என்றும் கீப்பர் கேட்ச் பிடிக்கப்பட்டதற்கான ஸ்னிக்கோமீட்டர் சோதனை செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு வீரர் தலையில் காயமடைந்து கன்கஷன் விதியின் மூலம் வெளியேறினால், அவருக்கு பதிலாக வரும் வீரர் ஏற்கனவே பந்துவீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால். அவர் பந்துவீச அனுமதிக்கப்பட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory