» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 65ஆக தளர்வு : தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சனி 1, நவம்பர் 2025 3:47:12 PM (IST)

தாயுமானவர் திட்டம் பயணிகளுக்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசு மக்கள் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் என சிறப்பு பிரிவினருக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக சிறப்பு கவனம் தேவைப்படும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கும்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்தகுடிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று குடிமை பொருட்கள் விநியோகப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாயுமானவர் திட்டத்திற்கான வயது வரம்பு 70-ல் இருந்து 65 ஆக தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory