» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி புதுக்கோட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி

வியாழன் 8, ஜூன் 2023 12:48:27 PM (IST)தூத்துக்குடி புதுக்கோட்டை மேம்பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில்  புதுக்கோட்டை பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. ஓராண்டு காலத்தில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 2 ஆண்டுகளாக நிலவி வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மேம்பாலம் பணிகள் நிறைவுற்று பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.  

மேலும், திருநெல்வேலி- தூத்துக்குடி வழித்தடத்தில் இருக்கும் சர்வீஸ் சாலையின் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த சர்வீஸ் சாலைகளை விரைவாக சீரமைக்கவும், மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

SVM RajJun 11, 2023 - 05:26:19 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி முதல் திருநெல்வேலி KTC நகர் வரை சாலைகளின் மத்தியில் பிரிவுக்கோடுகள் அறவே இல்லை. மேலும் இரு பிரிவு சாலைகளின் மத்தியில் மத்தியில் செடிகள் அறவே கிடையாது. பராமரிப்பு செய்வதே இல்லை. வல்ல நாடு தாமிரபரணி பாலம் பல ஆண்டுகளாக ஒரு வழி பாதை தான்...இரவு நேரங்களில் பெரிய விபத்திற்கு இச்சாலை வழி வகுக்கும் என்றே தோன்றுகிறது. இந்த லட்சணத்தில் இங்கு ஒரு டோல் கேட் வசூல். இந்தியாவிலேயே மிக மோசமான சாலை இது தானோ...என நினைக்க தோன்றுகிறது.ஆட்சியாளர்கள் இரவு நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து திதூத்துக்குடிக்கு இச்சாலையில் வாகனம் ஓட்டி வந்தால் கஷ்டத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SVM RajJun 11, 2023 - 05:26:18 AM | Posted IP 172.7*****

தூத்துக்குடி முதல் திருநெல்வேலி KTC நகர் வரை சாலைகளின் மத்தியில் பிரிவுக்கோடுகள் அறவே இல்லை. மேலும் இரு பிரிவு சாலைகளின் மத்தியில் மத்தியில் செடிகள் அறவே கிடையாது. பராமரிப்பு செய்வதே இல்லை. வல்ல நாடு தாமிரபரணி பாலம் பல ஆண்டுகளாக ஒரு வழி பாதை தான்...இரவு நேரங்களில் பெரிய விபத்திற்கு இச்சாலை வழி வகுக்கும் என்றே தோன்றுகிறது. இந்த லட்சணத்தில் இங்கு ஒரு டோல் கேட் வசூல். இந்தியாவிலேயே மிக மோசமான சாலை இது தானோ...என நினைக்க தோன்றுகிறது.ஆட்சியாளர்கள் இரவு நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து திதூத்துக்குடிக்கு இச்சாலையில் வாகனம் ஓட்டி வந்தால் கஷ்டத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓட்டு போட்ட முட்டாள்Jun 10, 2023 - 12:54:54 PM | Posted IP 162.1*****

சொகுசு ac காரில் போகும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் படும் கஷ்டம் தெரியாது .

PrakashJun 10, 2023 - 10:30:48 AM | Posted IP 172.7*****

பொதுமக்கள் எப்படி போனால் அவர்களுக்கு என்ன. அரசியல் வியாதிகளின் பொழப்பு ஓடனும்.

ModiJun 9, 2023 - 07:56:04 PM | Posted IP 172.7*****

கட்டினதெல்லாம் சரி நான் வந்து தான் திறக்கணும்

RaymondJun 9, 2023 - 05:47:41 PM | Posted IP 172.7*****

Pls open it quickly if it is ready for use.

Mahesh RJun 9, 2023 - 10:12:38 AM | Posted IP 172.7*****

Waste of money and பொதுமக்கள் மட்டுமே இதனால் பாதிக்க பட்டுள்ளார்கள்

DavidJun 8, 2023 - 07:55:05 PM | Posted IP 172.7*****

இந்த மேம்பாலம் கட்டுனது waste

தனபால்Jun 8, 2023 - 07:49:25 PM | Posted IP 172.7*****

புதுக்கோட்டை மேம்பாலம் வேலை முடிந்த நிலையில் அதனை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேம்பாலத்தை ஒட்டி தெற்கில் உள்ள சர்வீஸ் சாலை பயணிக்க தகுதியற்ற நிலையில் உள்ளது. இந்த சர்வீஸ் சாலை வழியாக, வாகனங்களில் பயணிப்பவர்கள் தங்கள் முதுகெலும்பை பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

வாகன ஒட்டிJun 8, 2023 - 05:43:31 PM | Posted IP 172.7*****

பாலத்துக்கு அடியிலே ரோடு சரியில்லை , திருநெல்வேலிக்கு போக வர சிரமமாக உள்ளது. சீக்கிரம் திறந்து விடுங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital
Thoothukudi Business Directory