» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு 4 புதிய திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 3:43:46 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 4 முக்கிய திட்டங்களை அறிவித்தார். 
  • முதல் அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். இந்த பூங்கா, விண்வெளி துறைக்குத் தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும். 
  • இரண்டாவது அறிவிப்பு: கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இதற்காக ஒரு பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும்.  அந்த நிறுவனம் மூலம், கப்பல் துறை தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.  
  • மூன்றாவது அறிவிப்பு: முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவினத்தில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும்.
  • நான்காவது அறிவிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும். 


மக்கள் கருத்து

சண்முகம்Aug 5, 2025 - 10:49:10 PM | Posted IP 162.1*****

புதிய தொழிற்சாலைகளில் நான் முதல்வன் திட்டத்தில் அரசு பட்ஜெட் நிதியில பயிற்சி பெற்ற நபர்களை பணிக்கு தேர்ந்து எடுக்காமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பதிவு மூப்பு அடிப்படையாக காத்திருப்பவர்களை நிரந்தர பணிக்கு தேர்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory