» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
அடிப்படை வசதிகள் இல்லாத தூத்துக்குடி டோல்கேட்: கனிமொழி எம்.பி., நடவடிக்கை எடுப்பாரா?
புதன் 6, ஜூலை 2022 10:54:23 AM (IST)

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் தொலைதூர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். இது தொடர்பாக கனிமொழி எம்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க மட்டுமல்ல, பராமரிக்கவும் தனியார் தயவை எதிர்பார்க்கும் அரசு, நான்கு வழிச்சாலையில் சுமார் 45 கிமீக்கு ஒரு சுங்கச்சாவடியை (டோல்கேட்) அமைத்து வாகனதாரர்களை துன்புறுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் நான்குவழி, ஆறு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டதன் முதன்மையான நோக்கமே விபத்தில்லாத விரைவான பயணம், சொகுசான சுலப பயணம் தான். ஆனால், இந்த சாவடிகளால் சாவகாச பயணமே வாய்க்கிறது. டோல்கேட் பணியாளர்கள் வேறு தங்களை நோகடிப்பதாக வாகனதாரர்கள் புலம்புகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி எல்கையில் இருந்து 15 கிமீ தொலைவிற்கு அப்பால் டோல் கேட் அமைக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் மாநகராட்சி எல்கையில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் உள்ள டோல்கேட்டில் உள்ளூர் வண்டிகளுக்கு கட்டணம் கேட்டு தகராறு நடப்பது வழக்கமாகிறது.

இதுதவிர டோல்கேட் வளாகத்தில் அதற்குரிய அடிப்படை வசதிகள் அறவே இல்லை. கழிப்பறை பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. நீண்ட நெடுந்தூரத்திலிருந்து வரும் பணிகள், வாகன ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க கஷ்டமாக உள்ளதாக கூறுகின்றனர். வாகன ஓட்டிகள் நான்குவழிச்சாலையை பயன்படுத்த வரி கட்டியும் டோல்கேட் நிர்வாகத்தினர் எந்த வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
NameJul 12, 2022 - 04:33:17 AM | Posted IP 162.1*****
Yen minister mayor ku ithu theriyatha kanimoli than action yedukanuma oosila poravanga yarum itha kekka matangala ilai govt ku ithu theriyatha
kannanJul 6, 2022 - 11:59:04 AM | Posted IP 162.1*****
ஆசிரியரின் பதிவுக்கு நன்றிகள். தூத்துக்குடி அரசியல் கட்சி பிரமுகர்களின் பிடியில் தான் டோல்கள் இயங்கி வருகின்றன. அதனால் அதிகாரிகளும் கண்டு கொள்ள மாட்டார்கள். துறைமுகம் சாலையே இதற்கு சான்று.
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி புதுக்கோட்டை மேம்பாலம் திறப்பு எப்போது? சமூக ஆர்வலர்கள் கேள்வி
வியாழன் 8, ஜூன் 2023 12:48:27 PM (IST)

தூத்துக்குடி மேலூரில் முத்துநகர், மைசூர் ரயில்கள் நின்று செல்ல வேண்டும்: ஆன்மிக இயக்கம் கோரிக்கை!
சனி 27, மே 2023 12:32:26 PM (IST)

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?
திங்கள் 28, நவம்பர் 2022 10:57:27 AM (IST)

தூத்துக்குடி மக்களை கவர்ந்த விருதுநகர் ஃபேமஸ் பெஞ்ச்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 9:58:49 AM (IST)

விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வியாழன் 17, மார்ச் 2022 11:29:41 AM (IST)

தமிழகத்தில் மே 15 முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்!
சனி 15, மே 2021 12:04:55 PM (IST)

SeenivasagamJul 17, 2022 - 09:23:12 AM | Posted IP 162.1*****