» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை : டீன் நேரு தகவல்!

ஞாயிறு 24, ஏப்ரல் 2022 8:05:28 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரூ.16கோடி மதிப்பிலான அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டீன் நேரு கூறினார்.

தூத்துக்குடி இந்திய மருத்துவ கழகம் சார்பில் புற்றுநோய் சிகிச்சையில் நவீன முறைகள் குறித்து டாக்டர்களுக்கான கருத்தரங்க நிகழ்ச்சி தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இந்திய மருத்துவ கழக தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு, டாக்டர்கள் மதிப்பிரகாசம், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தேசிய தலைவர் அருள்ராஜ் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து புற்றுநோயை கண்டறிதல், குணப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி, நவீன சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்கள் மைதிலிபால், புளோரா மற்றும் டாக்டர்கள் விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் டீன் நேரு பேசும் போது, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தேசிய நல்வாழ்வுக்குழுமம் சார்பில் ரூ.16 கோடி செலவில் புற்று நோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் என்ற நவீன கருவி நிறுவப்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த கருவி இயங்கி வருகிறது. இதன் மூலம் இதுவரை 372 நோயாளிகள் சிகிச்சை பெற்று உள்ளனர். இந்த கருவியை பயன்படுத்தி அரசு டாக்டர்களால் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி தவிர நெல்லை, மதுரை அரசு மருத்துவமனைகளிலும் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவியின் முக்கியத்துவம் மக்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை. இதனை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இந்திய மருத்துவ கழக பொருளாளர் ஆர்த்தி கண்ணன், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, டாக்டர்கள் குமரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய மருத்துவ கழக செயலாளர் சிவசைலம் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory