» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை
விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் : மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வியாழன் 17, மார்ச் 2022 11:29:41 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் விண்ணப்பித்த 3 நாட்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற மாநகராட்சி மேயர் ஜெகன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்கள் விண்ணப்பித்த மூன்றே நாட்களில் பெற்றிடும் வகையிலான ஒர் புதிய திட்டத்தை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார். அதன்படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்கள் உடனடியாகவும், எளிதாகவும் சான்றிதழ்களை பெற்றிடும் வகையில், தமிழக அரசின் https://www.crstn.org என்ற இணையதள முகவரியில் மாநகராட்சி நிர்வாகம் மூன்றே நாட்களில் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் மூன்றே நாட்களில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றதழ்கள் பெற்றிட முடியும். இந்த புதிய திட்ட அறிவிப்பு குறித்த தகவலை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பகுதி பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் படியும் மேயர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மே 15 முதல் புது கட்டுப்பாடுகள்: முழு விவரம்!
சனி 15, மே 2021 12:04:55 PM (IST)

கரோனா காலத்திலும் வ.உ.சி துறைமுகம் 31.79 மில்லியன் டன் சரக்கு பெட்டகங்களை கையாண்டு சாதனை!!
வெள்ளி 14, மே 2021 11:35:27 AM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு தகன மேடையை உடனடியாக செயல்பட வைக்க நடவடிக்கை - அமைச்சரிடம் கோரிக்கை!
வியாழன் 13, மே 2021 3:14:39 PM (IST)
_1607430322.jpg)
குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆற்றின் கரையில் உடைப்பு - ஆட்சியர் ஆய்வு!!
செவ்வாய் 8, டிசம்பர் 2020 5:54:48 PM (IST)

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆற்றின் கரையில் உடைப்பு - ஆட்சியர் ஆய்வு!!
சனி 1, ஆகஸ்ட் 2020 10:29:12 AM (IST)

குமரி மாவட்டத்தில் பலத்த மழை: ஆற்றின் கரையில் உடைப்பு - ஆட்சியர் ஆய்வு!!
வியாழன் 23, ஜூலை 2020 12:55:43 PM (IST)
