» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரூரில் நாளை முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

வியாழன் 9, ஜூலை 2026 3:18:55 PM (IST)

CMVijayFile4i.jpg

கரூரில் நாளை முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் அரசு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்குப் பலகோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சி கரூரில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் நேரடியாகக் கலந்து கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேருரையாற்றுகிறார். 

பல்வேறு அரசுத் துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார். மேலும் ரூ.1700 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத (Non-Leather) காலணிகளை உற்பத்தி செய்யும் புதிய தனியார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழிற்சாலையின் மூலம் சுமார் 13,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காகப் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இறுதிவட்டக் கட்டத்தை எட்டியுள்ளன. முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கரூரில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், விழா திடல், தங்குமிடம், மற்றும் முதலமைச்சர் பயணிக்கும் வழித்தடங்கள் முழுவதும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory