» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு: சுகாதாரத் துறைக்கு அதிரடி உத்தரவு!
புதன் 8, ஜூலை 2026 8:36:10 PM (IST)

தமிழக முதலமைச்சர் விஜய் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், உயர் அரசு அதிகாரிகள், மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர். மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கிருந்த தலைமை மகப்பேறு மருத்துவர்கள், நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். தாய்-சேய் நல சேவைகள், மகப்பேறு மருத்துவ சிகிச்சைகளின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
உள்நோயாளிகள் பிரிவு, பிரசவித்த தாய்மார்கள் சிகிச்சை பெறும் வார்டுகளுக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்கள், அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், மருந்து மாத்திரைகளின் தரம் குறித்து நேரடியாகக் கேட்டறிந்து குறைகளை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.
ஏழை, எளிய பொதுமக்களுக்குத் தரமான, பாதுகாப்பான, மிக விரைவான மருத்துவச் சேவைகள் தங்கு தடையின்றிக் கிடைப்பதைச் சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அருண்ராஜ், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க வன்னி அரசு வலியுறுத்தல்!
திங்கள் 20, ஜூலை 2026 5:55:15 PM (IST)

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி: மின்கட்டணக் குளறுபடிகளுக்கு பாஜக கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 5:16:12 PM (IST)

தமிழ்நாட்டில் நடப்பது சாத்தானின் ஆட்சியா? - தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
திங்கள் 20, ஜூலை 2026 3:36:01 PM (IST)

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

மாதந்தோறும் 2,000 கோடி யு.பி.ஐ பரிவர்த்தனைகள்: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
ஞாயிறு 19, ஜூலை 2026 10:39:47 AM (IST)

பணத்தை வாரி இறைத்து அப்பாவிகளின் வாயை அடைக்க முயற்சி: தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
சனி 18, ஜூலை 2026 5:46:54 PM (IST)








