» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தென் தமிழக கடலோர பகு​தி​களில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!

சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்​தில் இன்​று​ முதல் ஏப். 30-ம் தேதிவரை ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென் தமிழக கடலோர பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. மேலும் கிழக்கு விதர்பா முதல் குமரிக்​கடல் வரை தெலங்​கா​னா, உள் கர்​நாடகா மற்​றும் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்​வுப் பாதை சுமார் 900 மீட்​டர் உயரத்​தில், நிலவுகிறது.

இதன் காரண​மாக இன்று (ஏப். 25) முதல் ஏப். 27-ம் தேதிவரை மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் தென் தமிழக கடலோர மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை​யும், 28-ம் தேதி ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்​புள்​ளது. 29, 30 தேதி​களில் தமிழகம், புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

உள் தமிழக மாவட்​டங்​களில் இன்​று​ முதல் 27-ம் தேதி வரை அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை உயரக்​கூடும். தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக ராம​நாத​புரம் மாவட்​டம் தங்​கச்​சிமடத்​தில் 2 செமீ, மழை பதிவாகியுள்​ளது. இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory