» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 25, ஏப்ரல் 2026 10:44:27 AM (IST)
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் வசிக்கும் வசதியற்ற மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் 2010-11ம் ஆண்டு முதல் இலவச கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி, வரும் கல்வியாண்டில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம்.
2025-26ம் கல்வியாண்டில் பிளஸ்-2 வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆதரவற்ற, தாய்-தந்தையற்ற, குடும்பத்தில் பட்டப்படிப்புக்கு வரும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த திட்டம் குறித்த விவரங்கள் மற்றும் பதிவேற்றம் செய்ய வேண்டிய சான்றிதழ்கள் ஆகியவை www.unom.ac.in என்ற சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இனி தினமும் 2 முறை ஸ்ட்ராங் ரூம் ஆய்வு : அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
சனி 25, ஏப்ரல் 2026 5:19:09 PM (IST)

குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? த.வெ.க தலைவர் விஜய் மீது விசிக புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 4:26:08 PM (IST)

அதிமுக கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:36:21 PM (IST)
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)

செங்கோட்டை, குமரி ரயில் சேவையில் மாற்றம்: பாலக்காடு ரயில் சேவை பகுதியாக ரத்து!
சனி 25, ஏப்ரல் 2026 10:36:04 AM (IST)







